சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவொற்றியூருக்கு நோக்கி வந்து கொண்டிருந்த தடமென் 159A பேருந்து தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.அடையாளம் தெரியாத ஒரு முதியவர் பேருந்து மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அந்த முதியவர் பேருந்து சக்கரத்தின் இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கு வந்த தண்டையார்பேட்டை காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டதில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது மேலும் இவர் எந்த பகுதியை சேர்ந்தவர் தற்கொலைக்கான காரணம் என தொடர்ந்து தீவிரமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.