ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 12 பேருக்கு சேம நல நிதியாக ₹1.20 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றியத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் விலகி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.இதனை தொடர்ந்து அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மருத்துவர் அணி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சு.ரவி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபால், மருத்துவர் அணி துணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவர் அணி துணை செயலாளர் கிருபா, மாவட்ட மகளிரணி செயலாளர் ராதிகா மற்றும் நகர செயலாளர்கள் மணி, மோகன், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், பெல் தமிழரசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..