சென்னை திருவொற்றியூரில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலெக்சாண்டரின் அறிவுறுத்தலின் பெயரில் ஆறாவது வட்ட பகுதி சார்பாக 300 ஆட்டோ ஓட்டுனர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார். 144 தடை உத்தரவினால் வாழ்வாதாரம் இழந்து கடந்த 20 நாட்களாக வேலை இல்லாமல் கஷ்டப்படும் திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் ,சார்லஸ் நகர், பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சவர தொழிலாளர்களுக்கு அரிசி ,பருப்பு ,சமையல் எண்ணெய், உள்ளிட்ட உணவுப் பொருட்களும் சுவாச கவசம் சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவினால் ஆட்டோக்கள் ஓடாமல் கடைகள் திறந்து தொழில் செய்ய முடியாமல் கடந்த 20 நாட்களாக அவதிப்பட்டு
வருவதினால் அவர்கள் நலன் கருதி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
திருவொற்றியூர் அதிமுக வட்ட செயலாளர் மணிக்குமார் தலைமையில் வழங்கப்பட்டன இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமலிங்கம். மனோகரன். ராஜா. வெங்கட். மைக்கல். சரவணன். கலந்து கொண்டனர்.