சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் செல்போன் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் இன்று கொருக்குப்பேட்டையிலிருந்து மணலி சாலை வழியாக கொடுங்கையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கமாக பருப்பு ஏற்றி கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். அவருக்கு பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.