வடசென்னை பகுதியில்

நெட்வொர்க்காக செயல்பட்ட

பிரபல லாட்டரி வியாபாரி கைது

 

வடசென்னையில் குடும்ப நெட்வொர்க்காக செயல்பட்ட லாட்டரி வியாபாரி கைது செய்யப்பட்டார்

 

இணை கமிஷனர் பாலக்கிருஷ்ணனுக்கு வடசென்னை பகுதியில் ஜே.வி.எம் என்ற பேரில் லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது இதையடுத்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் விஜய் தலைமைக்காவலர் முருகேசன் காவலர் விமல் ஊர்க்காவல் படை வீரர் அருண்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர் வடசென்னை பகுதியில் லாட்டரி விற்பனையை நிறுத்திய பழைய வியாபாரிகள் சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர் அதில் ஜே.வி.எம் என்றால் தண்டையார் பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் வசிக்கும் செல்வமணி(54) என தெரியவந்தது இவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிந்து கைது செய்து அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இவரிடம் இருந்து எழுத்துகள் கொண்ட லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டன

 

மேலும் தனிப்படை நடத்திய விசாரணையில் ஜே.வி.எம். செல்வமணி கேரளாவில் வசிக்கும் தம்பி செந்தில் குமார் மூலம் பம்பர் லாட்டரி பெங்களூரில் வசிக்கும் மகள் அபர்ணா மூலம் பூட்டான் லாட்டரி அடையாறு ராக்கேஷ் என்பவர் மூலம் மார்ட்டின் லாட்டரி ஆகியவற்றை விற்றுள்ளார் அபர்ணா ஆன் லைன் மூலம் லாட்டரி நம்பர்களை அனுப்பி வைத்துள்ளார் பம்பர் லாட்டரி 5 கோடி வரையிலும் மார்ட்டின் லாட்டரி ரூ 7 லட்சம் வரையில் பரிசுகள் உள்ளன லாட்டரி சீட்டு அடித்தவர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவாராம் கைது செய்யப்பட்ட ஜே.வி.எம் செல்வமணி மீது காசிமேடு ராயபுரம் காவல் நிலையங்களில் லாட்டரி விற்பனை வழக்கு நான்கு உள்ளன.