சென்னை ராயபுரத்தில் கொரொனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்க பட்டுள்ளது.
அதில் ஒரு பகுதியான ராயபுரம் அப்பயர் தெருவில் 28 குடும்பங்கள் வசித்து வருகின்றது அதில் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு அப்பகுதி அடைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வீட்டுக்கு ஒருவரை வெளியே அனுமதிக்குமாறு கோரிக்கை எழுப்பி 30க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த ராயபுரம் காவல் உதவி ஆணையர் தினகரன்.தங்களுக்கு உதவி செய்ய 10க்கும் மேற்பட்டோர் உங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கவும் தேவையில்லாமல் யாரையும் வெளியே அனுமதிக்க முடியாது என்று கூறினார் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாமல் குடும்பத்துக்கு ஒருவரை வெளியே அனுப்புமாறு கோஷங்களை எழுப்பினர் அப்போது கூறிய உதவி ஆணையர் தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலை புரியாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான வழக்கு பதியப்படும் என்று ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் தெரிவித்தார் சிந்தித்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.