சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த 32 நபர் கடந்த மார்ச் மாதம் 16 ந்தேதி நேபாளத்திற்கு ரயில் மார்க்கமாக புனித யாத்திரை மேற்கொண்டு பல்வேறு திருத்தலத்திற்க்கு சென்று வழிபட்டனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் காரணமாக மார்ச் 24ஆம் தேதி இந்திய மற்றும் நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் யாத்திரையை பாதியில் முடித்து நாடு திரும்பும் முயற்சியில் யாத்திரை குழுவினர் ஈடுபட்டு நேபாளத்தில் சிக்கி தவித்தனர்.இது சம்மந்தமாக யாத்திரை குழுவினர் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து யாத்திரை சென்ற 32 நபர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டனர்.
ஆர்.எஸ். ராஜேஷ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் எம்.பி.க்கு தகவல் தெரிவித்தார் மேலும் தமிழக முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சரின் துரித முயற்சியில் இந்திய மற்றும் நேபாள வெளியுறவு துறையின் மூலமாக யாத்திரை குழுவை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மார்ச் 25 ந்தேதி நேபாள ராணுவ பாதுகாப்புடன் உத்திரப்பிரதேச எல்லைக்கு உட்பட்ட கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பாண்டியனிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இவரிடம் மார்ச் 27 ந்தேதி யாத்திரை குழுவை சேர்ந்த 32 நபர்களை ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து  அவர்களுக்கு தங்கும் விடுதி, மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு லாக்டவுன் முடியும் வரை பாதுகாப்பாக ஆட்சியரின் மேற்பார்வையில் தங்க வைக்கப்பட்டனர்.
இது சம்மந்தமான தகவலை உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த  கோரக்பூர் மாவட்ட  ஆட்சியரான விஜயேந்திர பாண்டியன் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்றும் அ.தி.மு.க. பாராளுமன்ற எம்.பி. இரவீந்திரநாத்குமார், ஆகியோருக்கு தெரிவித்து
இந்நிலையில் கடந்த 32 நாட்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்க வைக்கப்பட்ட யாத்திரை குழுவினரை மாவட்ட ஆட்சியர் தனியார் பேருந்து மூலம் அவர்களுக்கான முறையான ஆவணங்கள் மற்றும் அவர்களுக்கு உணவு ஆகியவை ஏற்பாடு செய்து மே.3 ஆம் தேதி சென்னைக்கு வழியனுப்பிவைத்தார்.

கோரக்பூரில் புறப்பட்ட யாத்திரை குழுவினர் 32 நபர்களை உறவினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சென்னைக்கு வந்ததடைந்ததை யொட்டி அவர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ். ராஜேஷ் சால்வை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றார்.

பின்னர் யாத்திரை குழுவினர் செய்தியாளர்களிடம் பேசிய போது…
நேபாளத்திற்கு புண்ணிய யாத்திரை மேற்கொண்ட எங்கள் குழுவினருக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் ஆர்.கே.நகரில் வசிக்கும் உறவினர்கள் மூலம் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், அவர்களிடம் உதவி கோரியதால் அவரின் பெருமுயற்சியால்
தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், தூரிதமாக செயல்பட்ட அ.தி.மு.க. வை சேர்ந்த இரவீந்திரநாத்குமார் எம்.பி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயேந்திர பாண்டியன், ஆகியோர் எங்களுக்கு பெரிதும் உதவினர் என கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்