கடந்த 3ம் தேதி, கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பிரசவத்திற்காக, கடந்த 16ம் தேதி,ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 21ம் தேதி, அவருக்கு, சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா இல்லை என்பது உறுதியானது.
தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த முதல் சுகப்பிரசவம் இதுவாகும்.