சென்னை, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர், மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார், அதில், தனக்கு 17 வயதில் மகள் உள்ளார். அவர், அரும்பாக்கம் பகுதியில் உள்ள கேட்டரிங் கல்லூரி படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அன்று, கல்லூரிக்கு சென்றவர் , வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார், மகளிர் காவல் ஆய்வாளர் சுகுணா வழக்கு பதிவு செய்து, அந்த 17 வயது சிறுமியை தேடினர், ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை, தீவிர விசாரணை நடத்தியதில், வளசரவாக்கம், பெரியார் சாலையை சேர்ந்த மாதர்சா மகன்

உசைனுல்முசரப் (வயது19) என்பவர் மீது சந்தேகம் அடைந்து, அவரை தேடினர். கோடம்பாக்கம், சாமியார் மடம், முதல் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது விரைந்து சென்ற காவல்துறையினர் முசரப்பை பிடித்து, அவருடன், இருந்த அந்த 17 வயது சிறுமியயை மீட்டனர், காவல் துறையினர் விசாரனையில், இருவரும், ஒரே கேட்டரிங் கல்லூரியில் படித்ததும், அப்போது காதல் ஏற்பட்டதும். படிப்பை விட்ட முசரப் , ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்தபடி, வீடு வாடகைக்கு எடுத்து, சிறுமியை தன்னுடன் தங்க வைத்து அவருடன், பாலியல் அத்துமீறல் நடத்தியது தெரியவந்து, அவரை கைது செய்த காவல்துறையினர், முசரப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.