சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் என்கிற 92 வயது முதியவர் கடந்த 19ஆம் தேதி கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவர் ஆறு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் நான்கு நாட்கள் கொரோனா வார்டிலும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்தவுடன் நேற்று அவர் பரிபூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு உற்சாகப்படுத்தும் வகையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பொன்னாடைகள் போர்த்தி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

இதுவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 90 வயது உடைய நோயாளிகள் 30 பேரும் 80 வயது உடையோர் 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குறிப்பாக இதுவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மட்டும் 25 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.