சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருபவர் நடராஜன் இவர் வியாபாரம் முடிந்தவுடன் இரவு நேரத்தில் மது அருந்துவது வழக்கம் இந்நிலையில் மதுபோதையில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறு வயதுப் பெண்ணிடம் தன் ஆடையை விலக்கி சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொள்வதை கண்ட அப்பகுதி மக்கள். ஆத்திரமடைந்து டீ வியாபாரியான நடராஜனை பிடித்து தர்ம அடி கொடுத்து தண்டையார் பேட்டை மகளிர் காவல் நிலையத்தில். புகார் தெரிவித்தனர்

புகாரின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட டீ வியாபாரி நடராஜனை விசாரித்த மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.