ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தை கண்டித்து லாலாப்பேட்டை பகுதி சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் மற்றும் கடையடைப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாலாப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதி பத்துக்கும் மேற்பட்ட கிராம பொது மக்களின் பயன்பாட்டில் இருந்த சாலையை சுற்று சுவர் எழுப்பி போக்குவரத்தை தடை செய்தும் மாவேரி ஓடை மற்றும் நீர்வழி பாதைகளை ஆக்கிரமித்து இடையூறு செய்து வரும்

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை காலை லாலாப்பேட்டை சாவடி திடலில் நடைபெற்றது.10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் சாலையை பெல் நிறுவனம் தனக்கு சொந்தம் என்கிற முறையில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் செய்து வருகின்றது.இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர்,  பெல் நிறுவன அதிகாரிகளுக்கும் மனுகொடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே லாலாப்பேட்டை, முகுந்தராயபுரம், சீக்கராஜபுரம், தக்காம்பாளையம், ஏகாம்பரநல்லூர், உள்ளிட்ட 10 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தொழிலாளர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட  60க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிப்காட் புளியந்தாங்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். இதனால் ராணிப்பேட்டை பொன்னை நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..