சென்னை ஆர்கே நகர் எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதிகளில் சிறுவர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பியால் தாக்கி தப்பிச்சென்றனர் சம்பவம் தொடர்பாக ஆர்கேநகர் காவலர்கள் கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரை சேர்ந்த வில்லியம் (வயது 21) எழில் நகரை சேர்ந்த வினோத் (வயது 20) இருவர் உள்பட 4 சிறுவர்களை கைது செய்தனர் காவல்துறை விசாரணையில் கூவம் ஆறு ஓரமாக நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அமர்வதற்கு இடம் அமைத்து பொழுதை கழித்து வந்துள்ளனர் இதைப்பார்த்த எழில்நகர் பகுதியை சேர்ந்த சிலர் அந்த இடத்தை சேதம் செய்துள்ளனர் இதனால் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கும் எழில் நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதை மனதில் வைத்திருந்த எழில் நகர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நேதாஜி நகர் பகுதிக்கு சென்று அங்குள்ள சிறுவனை இரும்பு கம்பியால் தலை முதுகில் தாக்கி தப்பிச் சென்றனர் சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் ஆறு நபர்களையும் கைது செய்தனர் இந்த ஆறு நபர்களுக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளதாக தெரியவருகிறது.