சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் வசித்து வருபவர் வஜ்ரவேலு இவர் பழைய வண்ணாரப்பேட்டை முனுசாமி தெருவில் கடந்த 8 ஆண்டுகளாக சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். லைட்டை அணைக்காமலே கடையை பூட்டி சென்றதால் மின்கசிவு ஏற்பட்டு 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கடையின் உரிமையாளர் வஜ்ரவேல் கூறினார். ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.