தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் 144 தடை உத்தரவை யொட்டி கொருக்குப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதியோர்கள் உள்ளிட்ட 1000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை இன்று வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், நிவாரணமாக வழங்கி கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க சமூக விதிகளை பின்பற்றுமாறு அறிவுரைகளை வழங்கினார்.அண்ணா நகர் பகுதி ஊர் தலைவரும் பகுதி அவைத்தலைவருமான எம்.வேலு, ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள்

ஏ.வினாயகமூர்த்தி,
ஆர்.நித்தியானந்தம், மற்றும் பி.குணசேகரன், எல்.எஸ். மகேஷ்குமார், டி.பிரபாகரன், மாதவன், பிரசாந்த், புலிமுருகன், சீனிவாசன், எம்.கண்ணியப்பன், கே. கிருஷ்ணா, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.