தமிழக காவல்துறையினர் ஆந்திரா மாநிலம் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை கைது செய்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்திய நாளிலிருந்து அனாவசிய போக்குவரத்துக்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது இதனால் கடத்தல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனம் போல் சித்தரித்து காய்கறி பழம் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களைகொண்டு வரும் வாகனம் போல் கடத்தல் பொருட்களையும் அவ்வழியாக கடத்திச் செல்வதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்களுக்கு தெரியவந்தது இதனால் சென்னை நகரத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை சாவடிகளில் சோதனை செய்ய வேண்டும் என்று அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார் அதனடிப்படையில் கூடுதல் காவல் ஆணையர் அருண் தலைமையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இணை ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடி மேற்பார்வையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர் அப்போது செங்குன்றம் சோதனை சாவடி வழியாக வெங்காயம் ஏற்றிவந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர் அதில் மறைத்து வைத்திருந்த 451 கிலோ கஞ்சாவை காவலர்கள் கைப்பற்றினர் இந்த கடத்தல் வழக்கில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண் பாண்டி (வயது33) முருகேசன் அவரின் மகன் விக்னேஷ் (வயது 28) இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர் இதை தொடர்ந்து ஆந்திரா பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சமூக விரோத செயலில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார் அதனடிப்படையில் மாதவரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் தமிழகத்திலும் ஆந்திரப் பிரதேசத்திலும் பல்வேறு தேடுதல் வேட்டைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர் தமிழகத்தில் தேடுதல் வேட்டை நடத்திய போது முக்கிய குற்றவாளியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த நாகூர் கனி அவரின் மகன் சிராஜூதீன் (வயது 33) இவருக்கு அடைக்கலம் கொடுத்த விழுப்புரத்தை சேர்ந்த வீராச்சாமி அவரின் மகன் கார்த்திக் (வயது 27) என்பவரை கைது செய்யப்பட்டு ஆந்திராவை சேர்ந்த எதிரிகளை தேடி மாதவரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து ஆந்திராவில் உள்ள நசிரி பட்டினம் என்ற நகரத்தில் முகாமிட்டு ஆந்திரா காவல் துறையினரிடம் இணைந்து வீடு வீடாக விசாரணை மேற்கொண்டனர் இதில் நசிரிபட்டினத்தை சேர்ந்த நக்க பானு பிரகாஷ் (வயது 23) கண்டி கிருஷ்ணன் (வயது 23) இருவரை கைது செய்து தமிழகம் கொண்டு வரப்பட்டது முக்கிய குற்றவாளியாக இருந்த சிராஜுதீன் அவரது கூட்டாளியான சரவணன் என்பவரையும் சென்னை எண்ணூரில் உள்ள சரவணனின் கள்ளக்காதலியின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டது இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியான தமிழகத்தை சேர்ந்த சிராஜூதீன் தலைமறைவாக உள்ள ஆந்திராவை சேர்ந்த நவீன் என்பவருக்கு ஏழரை லட்சம் பணம் இணையதள வர்த்தகம் மூலம் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது .