சென்னை திருவொற்றியூர் இந்திரா காந்தி நகர் மெயின் ரோட்டில் ஜான்சன் என்பவருக்கு சொந்தமான மரக்குடோன் உள்ளது.

இந்த குடோனில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து கொண்டது

அப்போது காற்று பலமாக வீசவே தீ குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது, இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின்பேரில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை மணலி, கொருக்குப்பேட்டை, தங்கசாலை பகுதிகளிலிருந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் தீ யை அணைக்க 6குடிநீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த மினி லாரி மற்றும் மரத்தை அறுக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மரச்சாமான்கள் உட்பட 40 லட்சத்திற்கு அதிகமான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு மின்சார ஒயர் அருந்து விழுந்ததில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது,