திருவெற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பத்திர விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார் கடந்த வெள்ளிக்கிழமை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை விற்று அந்த பணத்தை தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து தேரடியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்துள்ளார் அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் அவர் அலுவலகத்துக்குள் செல்லும்போது அவரது இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்

இது தொடர்பாக திருவெற்றியூர் காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் கொடுத்திருந்தார் இந்த புகார் தொடர்பாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, உத்தரவின் படி உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், ஆனந்தகுமார், மேற்பார்வையில்

ஆய்வாளர் தவவமணி, தலைமையில் உதவி ஆய்வாளர்கள் நாகராஜன், வானவாமலை, தலைமைக் காவலர் மனுவேல், முதல் நிலை காவலர்கள் பாலமுரளி, ஜீவா, தீபன், ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை கேமரா மெக்கானிக் முன்னா உதவியுடன் திருவொற்றியூரில் இருந்து ஆர்கே நகர் கொளத்தூர் வரை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர் இதில் கொளத்தூர் ராஜ மங்கலத்தைச் சேர்ந்த விமல் வயது 46 என்பது தெரியவந்தது இவரை மணலி விரைவுச்சாலை பேசின் ரோடு அருகில் இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர் விமல் இடமிருந்து

ரூபாய் 3 லட்சத்து 67 ஆயிரத்து 900 ரூபாய் காவல் துறையினர் கைப்பற்றினர். விமல் உடன் இருந்த கூட்டாளி டேனியல் (வயது 51) பெஜ்ஜியம் என்கின்ற (பாபு) (வயது 34) தலைமறைவாக உள்ளனர் விமலிடம் நடத்திய விசாரணையில் சென்னை முழுவதும் 8 காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதாக தெரியவந்தது மேலும் திருவண்ணாமலையிலும் வீடு புகுந்து திருடிய வழக்கு உள்ளதாக தெரியவந்தது விமல் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.