சென்னை தண்டையார்பேட்டை அம்மணி அம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி இவர் மினி பஸ் வைத்து ட்ராவல்ஸ் நடத்தி வருகிறார் இந்நிலையில் இ பாஸ் மூலம் பெங்களூருக்கு சென்றவர் திரும்பி வரும்பொழுது பெங்களூரில் மதுபான கடைகள் திறந்து இருக்கவே சென்னையில் மதுபானங்கள் கிடைக்காமல் குடிமகன்கள் அவதிப்படுவதை அறிந்து கூடுதல் விலைக்கு மதுவை விற்கலாம் என்ற நப்பாசையில் குவாட்டர் மற்றும் ஆப் மது பாட்டில்களை மினி பஸ்சில் வைத்து சென்னைக்கு கொண்டு வந்துள்ளார் இந்நிலையில் புது வண்ணாரப்பேட்டையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மினி பேருந்தை சோதனையிடவே மதுபாட்டில்கள் பதுக்கி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சுப்பிரமணியை கைது செய்து பேருந்தையும் பறிமுதல் செய்து பேருந்தில் இருந்த 150 குவாட்டர் பாட்டில் மற்றும் 40 ஆப் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை ஈடுபட்டுவருகின்றனர் ஊரடங்கு உத்தரவை நாள் சென்னையில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளன நிலையில் டிராவல்ஸ் நடத்தி வருபரையும் மது பாட்டில்களை விற்பனை செய்ய இந்த ஊரடங்கு ஆசையை தூண்டி விட்டுள்ளது.