சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் தோட்டம் 1வது,தெருவில்
அப்துல் ரசாக், என்பவருக்குச் சொந்தமான டியோ இருசக்கர வாகனத்தை, தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். பிறகு வந்து பார்த்தபோது வாகனம் திருட்டு போய் இருப்பதை அறிந்த அவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் அதே பகுதியில் தஸ்தகீர் பாஷா என்பவருக்குச் சொந்தமான ஆக்டிவா காணாமல் போயிருந்தது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், கண்ணன் ரவுண்டானா அருகே சுற்றித்திரிந்த தமிமுன் அன்சாரி(37), அமீனுள்ள(40) மற்றும் அன்புச்செழியன்(56) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை செய்ததில், இவர்கள் இதேபோல் பல இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் தமிமுன் அன்சாரி மீது பழைய வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, கிண்டி ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.