சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்ப தோட்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் வினோத் பண்டிகை காலத்தை ஒட்டி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் துணி எடுப்பதற்காக வந்த இரண்டு பெண்கள் 10 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர் இதனை கவனித்த கடை உரிமையாளர் உடனடியாக தப்பிச் சென்ற இரண்டு பெண்களையும் துரத்திச் சென்றார் அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் மூலமாக இருவரையும் பிடித்து பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகம்மாள், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அம்மு, என்பதும் தெரியவந்தது இதனையடுத்து அவர்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை கைப்பற்றி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.