ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதிகளில் உள்ள டயர் கம்பெனியில் இருந்து இரண்டு கண்டனர் லாரிகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு டயர் ஏற்றிச் சென்ற 2 கண்டெய்னர் லாரிகளில் 223 டயர்களை ஏற்றி அனுப்பினார்.

திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச் சாலையில் உள்ள சுங்கத்துறை ஆவன பரிசோதனை மையத்திற்கு சென்ற போது கண்டெய்னர் லாரியின் சீல் உடைக்கப்பட்டு இருந்தால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமார், தலைமையில் காவலர்கள் லாரி ஓட்டுனர் இருவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர் விசாரணையில் எண்ணூர் பகுதியில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்த 223 டயர்களை திருடி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவலர்களிடம் தெரிவித்தனர் பின்னர்
லாரி டயர்களை பறிமுதல் செய்தனர்
கண்டைனர் லாரி ஓட்டுனர்கள் இளமாறன், மற்றும் காளிமுத்து, இருவரையும் கைது செய்து எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.