சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் இந்நிலையில் மாடல் லைன் குடிசை மாற்று வாரிய பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கும் பொழுது ராஜா என்பவர் பப்லு என்ற வினித் மற்றும் சந்தோஷ் ஆகியோரிடம் 1800 கிராம் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது மேலும் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் விஜயகுமார் தலைமையில் பிடிக்கப்பட்ட மூவரையும் விசாரிக்கும் பொழுது ராஜா என்பவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருவதாகவும் மாதவரம் ரெட்டேரி பகுதியில் உள்ள மாந்தோப்பின் அருகே கீழே கடந்ததாகவும் அதனை எடுத்துக்கொண்டு வந்து பழைய வண்ணாரப்பேட்டையில் விற்பனை செய்ய கொடுத்ததாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்தது மேலும் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் மூவரையும் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.