சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூட்டை மூட்டையாக சரக்கு ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்துகொண்டிருந்தது. வழிமறித்து சோதனை செய்ததில் ஓட்டுனர் ராஜேஷ்குமார் (வயது34) முன்னுக்குப் பின்னும் பதில் கூறியதால். காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆட்டோவில் வைத்திருந்தது. போதைப்பாக்கு என்பதும், வட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் போதை பாக்கு வியாபாரம் செய்து வருவதும், இதற்கு உடந்தையாக இருந்த ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த. அண்ணாமலை(வயது54) நடராஜன்(வயது58) இவர்களையும் புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் கைது செய்து 1.5 லட்சம் மதிப்புள்ள போதைபாக்கு, மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.